Categories: இந்தியா

ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது …!கேரள  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உறுதி

Published by
Venu

ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று  கேரள  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
 
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் நேற்று  கோயில் நடைதிறந்த  நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
Image result for சபரி மலை பெண்கள்  தாக்குதல்
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.

அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல்  ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

4 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

5 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

5 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

5 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

6 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

6 hours ago