கர்நாடகா:டிச.28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில்,கர்நாடகாவில் ஓமிக்ரான் தொற்றால் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,அதில் 15 பேர் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.எனவே,அச்சுறுத்தும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற டிச.28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார்.
அதன்படி,டிச.28 ஆம் தேதியிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,மத்தியப் பிரதேசம்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…