பிரச்சாரத்தில் பணத்தை அள்ளி வீசிய காங்கிரஸ் தலைவர்.? கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு.!

Default Image

பணத்தை அள்ளி வீசியதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

தேர்தல் பிரச்சாரம் :

தற்போது கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மார்ச் 29இல் மண்டியா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தேர்தல் பிரச்சார வேனில் இருந்தபடி ரூபாய் நோட்டுகளை மக்களை நோக்கி வீசியுள்ளதாக தெரிகிறது.

எப்ஐஆர் :

இந்த சம்பவத்தை அடுத்து அவர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்