அமேசான் நிறுவனம் அத்துமீறல்;கர்நாடக அரசு கண்டனம்…!

Default Image
  • கர்நாடக கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடை.
  • விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக அரசு கண்டனம்.

கர்நாடக மாநிலத்தின் கொடியாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்ட கொடி உள்ளது.அதில்,அம்மாநிலத்தின் அரசு முத்திரையாக 2 சிங்கங்கங்களின் உடல்கள் மற்றும் யானைகளின் முகங்கள் போன்றவை பதிவாகியிருக்கும்

இந்நிலையில்,கர்நாடக கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடையை  ஆன்லைன் வர்த்தக நிவனமான அமேசான்,கனடா நாட்டில் விற்பனை செய்து வருகிறது.
இதனையடுத்து,கர்நாடக மக்களின் கொடி மற்றும் அரசின் முத்திரையானது,நீச்சல் உடையில் இடம்பெற்ற சம்பவம் கர்நாடக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக,கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும், தங்கள் மாநில அரசு முத்திரை மற்றும் கர்நாடக கொடி நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நீச்சல் உடை விற்பனையை அமேசான் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக,இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கண்டனம் எழுந்ததையடுத்து,கூகுள் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்