ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், ஆதரவுகளை எழுந்து வருகிற நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் மக்கள் நான், எனது பெற்றோர் மற்றும் எனது தாத்தா பாட்டி ஆகியோர் இளம் வயது முதலே போராட்டத்தில்தான் இருக்கிறார்கள். காஷ்மீர் குழந்தைகள் 70 ஆண்டுகளாக வன்முறைக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள்.
எனது குடும்பம் தெற்கு ஆசியா தான். அதில் 1.8 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். நாம் அனைவரும் அமைதியாக தான் வாழ்கிறோம் என நம்புகிறேன். காஷ்மீர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைகளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
மேலும் தெற்கு ஆசியாவில் இருக்கும் சர்வதேச சமூக அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது பாதிப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன். 70 ஆண்டுகால போராட்டத்தை அமைதியான முறையில், சுமுக தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…