ஜம்மு காஷ்மீர் விவகாரம்! தனது உருக்கமான கருத்துக்களை பதிவிட்ட மலாலா!

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், ஆதரவுகளை எழுந்து வருகிற நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் மக்கள் நான், எனது பெற்றோர் மற்றும் எனது தாத்தா பாட்டி ஆகியோர் இளம் வயது முதலே போராட்டத்தில்தான் இருக்கிறார்கள். காஷ்மீர் குழந்தைகள் 70 ஆண்டுகளாக வன்முறைக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள்.

எனது குடும்பம் தெற்கு ஆசியா தான். அதில் 1.8 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். நாம் அனைவரும் அமைதியாக தான் வாழ்கிறோம் என நம்புகிறேன். காஷ்மீர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைகளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

மேலும் தெற்கு ஆசியாவில் இருக்கும் சர்வதேச சமூக அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது பாதிப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன். 70 ஆண்டுகால போராட்டத்தை அமைதியான முறையில், சுமுக தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்