பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட விவகாரம்..! நான்கு குற்றவாளிகள் கைது..!
பீகார் மாநிலம் அராரியாவின் ரஞ்சிகஞ்ச் பகுதியில் பத்திரிகையாளர் பிமல் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் நான்கு பேர் கைகு செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் மற்றொரு வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
மற்ற குற்றவாளிகளை பிடிக்க குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன என்று எஸ்பி அருண்குமார் சிங் தெரிவித்துள்ளார்.