தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் கவலை அளிக்கிறது : நடிகர் அர்ஜுன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் கவலை அளிக்கிறது என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அர்ஜுன் இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
இதையடுத்து கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜுன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மனவேதனையையும் கவலையும் அளிக்கிறது என்றார்