வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் ! இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவு

Published by
Venu

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல்  ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம்  கண்டனம் தெரிவித்தது.

வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளது மத்திய அரசு  என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.மேலும்  வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும்.வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது . உங்களது பொது முடக்க உத்தரவால் ஏற்பட்டது என்று கூறி ,வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் ,வங்கிக் கடன் தவணையை செலுத்த  2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று மத்திய அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.பின் இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று  தெரிவித்தது.

Published by
Venu

Recent Posts

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

39 minutes ago

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

58 minutes ago

ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…

1 hour ago

மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த பள்ளியில் படித்து…

2 hours ago

2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!

ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…

2 hours ago

மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!

உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…

3 hours ago