சர்வதேச அங்கீகாரம் ரத்ததாகும் என இந்திய மல்யுத்த சம்மேளனதிற்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர். புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அடுத்ததாக தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை மல்யுத்த வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் குறித்து சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில் இந்திய மல்யுத்த சம்மேளத்திற்கு தங்கள் கண்டனம் மற்றும் அதிர்ப்தியை அதில் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பதக்கங்களை ஆற்றில் விடும் முடிவுக்கு வீரர் வீராங்கனைகள் சென்றது குறித்து தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
மேலும், தாங்கள் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் போராட்டங்கள் குறித்து ஆரம்பம் முதலில் கவனித்து வருவதாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டியை டெல்லியை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து பரீசலித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் சர்வதேச அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். ஒருவேளை சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அங்கீகாரத்தை ரத்து செய்தால் இந்திய தேசிய கொடியுடன் மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் வெளிநாட்டில் நடக்கும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…