‘கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களின் பாதுகாப்பையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நசிந்து விடாமல் பாதுகாப்பதையும் முக்கியமாக வைத்து, இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியதாவது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவது மாபெரும் சவால். கொரோனாவுக்கு, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். எனவே வைரஸ் தொற்றிலிருந்து மக்களையும், அவர்களது உடல் நலத்தையும் பாதுகாப்பதே முக்கியமாக வைத்து, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்,
கொரோனா வைரஸ் தொற்றால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் நசிந்து போகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதேநேரத்தில், இந்திய அரசு, தன் சக்திக்கு உட்பட்டு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா பரவல் துவங்குவதற்கு முன், வேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடாக இருந்தது. கொரோனா பரவலால், இந்தியாவின்மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த ஆண்டு, மிகவும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளால், அடுத்த ஆண்டு, 8.8 சதவீத வளர்ச்சியை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…