இதுபோன்று பரவும் தகவல் பொய்யானவை – இந்திய ரயில்வே துறை

Default Image

ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் முதியோர்களுக்கான சலுகை என பரவும் தகவல் பொய்யானவை என அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமானதாகவும் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் தட்கல் முறை ரயில் டிக்கெட் புக்கிங் மாற்றம் உள்பட ஏராளமான பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஜூலை 1 முதல் முதியவர்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை என பரவும் தகவல்கள் பொய்யானவை என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் PIB Fact Check தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், இந்திய ரயில்வே துறையில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் ஜூலை 1, 2022 முதல் மீண்டும் தொடங்கும் என்று போலியான ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. இது போன்ற எந்த அறிவிப்பும் இந்திய ரயில்வே துறையால் வெளியிடப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுகிறது வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ரயில்வே ரீ-ட்விட் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்