166 மணிநேரத்தில் 560 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து உலக அளவிலான மாரத்தான் போட்டியை வென்ற இந்தியர்!

Default Image

560 கிலோ மீட்டர் தூரத்தை 166 மணிநேரங்களில் கடந்து உலக அளவிலான பல நாள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அருண்குமார் பரத்வாஜ் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

மும்பை -நாசிக் – புனே ஆகிய மூன்று நகரங்களுக்கு இடைப்பட்ட 560 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சர்வதேச பலநாள் மாரத்தான் ஓட்டப் போட்டி ஜனவரி மாதம் 31ஆம் தேதி துவங்கியுள்ளது. இந்தப் போட்டியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருந்த நிலையில், இந்திய ஓட்டப்பந்தய வீரர் அருண்குமார் பரத்வாஜ் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே இதற்கு முந்தைய ஆண்டுகளில் பல தொலைதூர ஓட்டங்களில் பங்கெடுத்து மக்களுக்கான விழிப்புணர்வை கொடுத்து உள்ளவராகவும் விளங்குகிறார்.

இந்நிலையில் தற்போது சர்வதேச பலநாள் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு ஓடி இருந்த அருண்குமார், சவாலான, வெப்பமான மற்றும் செங்குத்தான மலைகளில் எல்லாம் ஓடி சென்று 166 மணி நேரங்களில் 560 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவுசெய்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் சர்வதேச பலநாள் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அருண் குமாருக்கு தான் சேரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்