இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும்-இஸ்ரோ தலைவர் சிவன்
இன்று சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதன் பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 2 கால் பதிக்கும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது.கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது.
வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று.அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம்.இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும் என்று பேசினார்.