அலர்ட்…இன்று காலை கரையை தொடும் ஜாவத் புயல் -வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஜாவத் புயல் இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிசா இடையே கடற்கரையை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,அதன்பின்னர் நண்பகலில் மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயலாக தீவிரமடைந்தது.
இந்நிலையில்,ஜாவத் புயல் இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிசா இடையே கடற்கரையை தொடும் என்றும்,மேலும்,சற்று திசை மாறி வடக்கு வடகிழக்கு நகர்ந்து நாளை ஒடிசாவின் பூரி கடற்கரை நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் புயல் காரணமாக வடக்கு கரையோர ஆந்திரா,தெற்கு கரையோர ஒடிசா பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும்,இன்று காலை மழை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,புயல் காரணமாக,கிழக்கு கடற்கரையில் ரயில்வே சார்பில் இயக்கப்படும் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம்,புயல் காரணமாக பாம்பன்,கடலூர்,நாகை,எண்ணூர், புதுச்சேரி,காரைக்காலில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
At 1730 IST of 3rd Dec the CYCLONIC STORM ‘JAWAD’ centered about 300 km south southeast of Vishakhapatnam and 480 km south southwest of Puri. To move north northwestwards till 4th Dec Morning and then recurve north northeastwards reaching near Puri coast around 5th december noon. pic.twitter.com/3z08x261HK
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2021