உடனே வெளியேறுங்கள்.! உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் உத்தரவு.! தூதரகம் அறிவிப்பு.!
உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது .
உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை வெளியேற சொல்லி ஏற்கனவே இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் வாழ் இந்தியர்களை வெளியேற கூறி மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.