லடாக்கின் லே பகுதிக்கு ராணுவ தளபதி நரவனே சென்றடைந்தார்.
இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.தொடர்ந்து இரு தினங்களாக பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராணுவத் தளபதி எம்.எம் நரவானே லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஆய்வு நடத்த நரவானே திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்கள் லடாக்கில் நரவானே பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…