காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை சார்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்தனர்.
அவர்கள் தாக்குதல் நடத்திய அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் இந்திய போர் விமானம் பாலக்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் இறந்தனர்.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் உடனடியாக வான்வெளியை மூடியது.பின்னர் பாகிஸ்தான் தெற்கு பகுதிக்கான 2 தடங்களை மட்டுமே திறந்து விட்டது.அதை தொடந்து இந்திய வான்வெளியில் தாற்காலிகமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதாக இந்திய விமானப்படை மே 31-ம் தேதி அறிவித்தது.
ஆனாலும் பாகிஸ்தான் வான்வெளியை திறக்கத்தால் இந்திய விமானங்கள் சுற்றி பறக்க நேரிட்டது.இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையே பதட்டம் குறைந்து உள்ளதால் இந்திய விமானங்கள் பறக்க 4 1/2 மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் தன் வான்வெளியை நேற்று முன்தினம் அதிகாலை திறந்தது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…