அகமதாபாத்தில் ஐ.பி.எல் பேருந்து செல்லவதற்காக சிக்னலில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின்,அகமதாபாத்தில் உள்ள பஞ்ச்ராபோல் கிராஸ்ரோட்ஸ் போக்குவரத்து சிக்னலில் நேற்று,ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் சொகுசு பேருந்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை அதே சிக்னலில் காரின் உள்ளே இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.17 வினாடிகள் நீளமுள்ள வீடியோ இந்த வீடியோவில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மூன்று பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிக்னலை கடந்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து,சமூக ஆர்வலர்களும்,நெட்டிசன்களும் கோபத்துடன் ஆம்புலன்ஸை எதற்காக நிறுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து, அகமதாபாத் போக்குவரத்து போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரனை நடத்துவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து,அகமதாபாத் போக்குவரத்து இணை காவல் ஆணையர் மாயன்க்சிங் இதைப்பற்றி கூறுகையில்,”நாங்கள் வீடியோவைப் பார்த்தோம்,இந்த குறிப்பிட்ட சிக்னலில் வாகனங்கள் செல்வதை போக்குவரத்து காவல்துறை அல்லது அகமதாபாத் காவல்துறை நிறுத்தியதா என்பதை இன்னும் சரிபார்க்கவில்லை.
இருப்பினும்,ஐபிஎல் வீரர்களோ அல்லது எந்தவொரு அமைச்சர் மற்றும் விஐபி காவலர்களாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் செல்வதை காவல்துறை ஒருபோதும் நிறுத்தாது.அதனால்,போலீசாரின் நற்செயல்களை கலங்கப்படுத்துவதற்காக இந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது”,என்று கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…