மனைவியின் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த கணவர்

Default Image

தெலுங்கானாவில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவில் ஜனகம்மா மாவட்டத்தில் பொம்மக்கூறு அணை உள்ளது.அங்கு ஹைதராபாத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அவினாஷ் என்பவர் குடும்பத்துடன் சென்றார்.அப்போது அவர் பொம்மக்கூறு அணைக்கு மனைவி திவ்யா  மற்றும் மனைவியின் சித்தப்பா மகள்கள் 2 பேருடன் குளிக்க சென்றார்.கணவர் மற்றும் சகோதரிகள் இருவர் குளித்துக்கொண்டிருக்க திவ்யா அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
பின் மூவரும் குளித்துக்கொண்டே ஆழம் அதிகமாக உள்ள இடத்திற்கு சென்றனர்.பின் திடீரென அந்த சமயத்தில் அவினாஷ் நீரில் மூழ்கினார்.பின்னர் அங்கிருந்த இரண்டு பெண்களும் அவரை நீரில் மூழ்கி தேட முயன்றனர்.ஆனால் மூவரும் நீரின் மேல் வராத காரணத்தால் திவ்யா உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்தார்.பின்னர் சிறிது நேரம் கழித்து மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்