நேரம் பார்த்து காத்திருந்து மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன் கைது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியை சேர்ந்த ஹர்சுலே எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய கட்டிட ஒப்பந்தகாரர் ஒருவரின் மனைவிக்கும் தம்பலே என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கட்டிட ஒப்பந்தகாரர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், அதை பயன்படுத்திக்கொண்ட தம்பலே அவரது வீட்டிற்கு சென்று ஒப்பந்தகாரர் மனைவியுடன் அடிக்கடி தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து கட்டிட ஒப்பந்தகாரரிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடிக்கடி தனது மனைவியுடன் இது குறித்து கேட்டு தகராறு செய்து வந்த ஒப்பந்தகாரர் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்ததால் திட்டமிட்டு தம்பலேவை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் வெளியூர் செல்வது போல சென்றுவிட்டு இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை அருகில் உள்ளவர்கள் மூலம் அறிந்து, அதன் பின் வீட்டிற்கு வந்து தம்பலேவை கொலை செய்துள்ளார் ஒப்பந்தகாரர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…