நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கூட முன்வராத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற அளவிற்கு மக்கள் தற்பொழுது உயிர் வாழ்வதற்கு அச்சப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா பகுதியை சேர்ந்த பெத்தையா என்பவரது மனைவிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மனைவியை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறி பெத்தையா வீட்டிற்கு வெளியில் உள்ள சிறிய அளவு குளியலறையில் அவரது மனைவியை தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்கு போதிய அளவு உணவு கூட வழங்காமல் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நரசிம்மாவை அவரது கணவர் துன்புறுத்துவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நரசம்மாவை பாத்ரூமிலிருந்து மீட்டதுடன் பெத்தையாவிற்கு மனநல ஆலோசனை வழங்கி, நாராசம்மாவை அவரது வீட்டில் உள்ள தனி அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…