பெண்ணின் வீட்டார் வரதட்சணை வழங்காததால் வாட்ஸ்அப் காலில் விவகாரத்து செய்து கொண்ட கணவர்.!
கணவருக்கு ரூ. 25 லட்சம் வரதட்சணையாக வழங்காததால் வாட்ஸ்அப்பில் மனைவிக்கு கால் செய்து மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்த கொண்ட மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலை சேர்ந்த இந்த தம்பதியினர் 2013ல் கணவர் வேலை இடமான பெங்களூருக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கணவர் 42 வயதான மனைவியிடம் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வந்தால் மட்டுமே தன்னுடன் இருக்க முடியும் என்று மிரட்டியுள்ளராம். இதனிடையே கணவர் கடந்த ஜூலை 31-ஆம் தேதி மனைவிக்கு வாட்ஸ்அப்பில் கால் செய்து மூன்று முறை தலாக் கூறி விட்டு மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண்மணி கணவரை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், தனது கணவர் எனது பெற்றோரிடம் 25 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரும்படி கடந்த ஜூன் மாதம் மூலம் நச்சரித்து வந்ததாகவும், இல்லையென்றால் தன்னுடன் வாழ முடியாது என்று மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் தன்னை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் மன வேதனையுடன் கூறியுள்ளார்.