உத்திரப் பிரதேசத்தில் கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரின் முகத்தில் அவரது மனைவி ஆசிட் வீசியுள்ளார். கான்பூரில் கூப்பர்கஞ்ச் பகுதியில் டப்பு குப்தா மற்றும் பூனம் தம்பதிகள் வசித்து வருகின்றனர். குப்தாவின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அவர் தனது மனைவியிடம் வீடு திரும்ப தாமதமானதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.
அதற்கு பூனம் , அது உன்னுடைய வேலை இல்லை என்று பதிலளித்துள்ளார். சில நிமிடத்தில் இந்த சிறிய பேச்சுவார்த்தை மிகப் பெரிய சண்டையாக மாறியது. சண்டை முற்றியதைத் தொடர்ந்து பூனம் அவரது கணவன் குப்தா மீது ஆசிட்டை வீசினார். இதனால் குப்தாவின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பூனத்தை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரித்தபோது குப்தா தான் இதற்கு காரணம் என்றும் அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுவார் என்றும் கூறினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…