செல்பி மோகம்! திடீரென வந்த ரயில்..அதிர்ச்சியில் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாலி மாவட்டம் ரயில் பாலத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற தம்பதியர், ரயில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, 90 அடி ஆழமான பள்ளத்தில் குதித்தனர்.
ரீல்ஸ் மற்றும் செல்பீ எடுப்பதற்காக பலரும் ஆபத்தை உணராமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி தான், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த போது, தம்பதியினர் தங்கள் உயிரைக் காப்பாற்ற 90 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாலத்தில் நின்று செல்பி எடுத்து கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு ரெயில் வந்த நிலையில் உயிரை காப்பாற்றி கொள்ள அவர்கள் கீழே குதித்தனர். பள்ளத்தாக்கில் குதித்த பிறகு, அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டார்கள். இருப்பினும், இருவருக்கும் சில சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டது.
இது தொடர்பான அதிர்ச்சியான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கொடுத்த தகவலின் படி, போலீசார் கூறியதாவது, சோஜத் ரோடு அருகே ஹரியாமாலி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மேவாரா (22) மற்றும் அவரது மனைவி ஜான்வி (20) கோரம்காட் சுற்றுலா சென்றுள்ளனர்.
ரயில் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்த போது, காம்லிகாட் ரெயில் நிலையத்திலிருந்து மர்வாட் பயணிகள் ரெயில் வந்தது. ரயில் வேகம் குறைவாக இருந்ததால் அது பாலத்தில் நின்றது, ஆனால் அதற்குள் தம்பதியினர் பயந்து, பாலத்திலிருந்து குதித்துவிட்டனர்” என கூறியுள்ளார்.
ரெயில் ஓட்டுநர் மற்றும் காவலர் பாலத்தில் இருந்து குதித்து காயமடைந்த தம்பதியரை எடுத்து, அவர்களை புலாட் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
राजस्थान के पाली जिले में एक बड़ा हादसा हुआ। राहुल मेवड़ा अपनी पत्नी जाह्नवी संग हेरिटेज पुल पर फोटो शूट करा रहे थे। तभी ट्रेन आ गई। ट्रेन से बचने को दोनों 90 फीट गहरी खाई में कूद गए। दोनों का इलाज जारी है।
🚨Disturbing Visual🚨 pic.twitter.com/WwDSTd5jrW
— Sachin Gupta (@SachinGuptaUP) July 14, 2024
மேலும், இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளில் செல்பி எடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் இவ்வகையான இடங்களில் பாதுகாப்பை நினைவில் கொள்ள வேண்டும். ரயில்வே நிர்வாகமும் பொதுமக்களை பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளில் செல்பி எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டு, பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.