இனி இந்த மாநகராட்சியில் ஹோட்டல் கழிப்பறை பெண்கள் குழந்தைகளுக்கு இலவசம்!

அசாம் மாநிலம் குவஹாத்தி மாநகராட்சி நிறுவ ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.அத்திட்டத்தில் இனிமேல் குவஹாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் கழிவறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்ததாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தமுடிவை அமல்படுத்த ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தமுடிவு நட்சத்திர ஹோட்டலுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.