கொலை வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் ஹோட்டல் இடிப்பு.!
கொலை வழக்கில் சம்பந்தமான பாஜக மூத்த தலைவர் மிஸ்ரி சந்த் குப்தாவின் ஹோட்டல் இன்று இடிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் கார் ஏற்றி ஒருவரைக் கொன்றதாக பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் மிஸ்ரி சந்த் குப்தா உள்ளிட்ட 7 பேர் மீது மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், மிஸ்ரி சந்த் குப்தாவிற்கு சொந்தமான ஹோட்டல் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி சிறப்பு குழு அந்த ஹோட்டல் கட்டடத்தை இடித்துள்ளனர்.
#WATCH | MP | Police razed illegal hotel of suspended BJP leader Mishri Chand Gupta after public protest over Jagdish Yadav murder case in Sagar
“There has been no loss of any kind. Only the building was demolished,” said Collector Deepak Arya (03.01) pic.twitter.com/VsAbVhRGi8
— ANI (@ANI) January 4, 2023