மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றது உள்துறை அமைச்சகம்
மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.இவர் இந்தியாவின் பிரதமராக 2004–2014 ஆண்டு வரை இருந்தவர் .தற்போது ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொருத்து எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக முன்னாள் பிரதமர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்உள்துறை அமைச்சகம் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்மோகனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.