கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்துள்ளார். அதையும் மீறி பள்ளிக்கு வந்தால் அந்த மாணவி ஒருவிதமான சோர்வுடன் காணப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.
அதில் கொடுமை என்னவென்றால் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் என பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சிறுமி கூறியுள்ளார்.
விடுமுறை நாள்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் வருவதாகவும் அந்த நாள் மிக கொடூரமாக இருப்பதாகவும் அந்த சிறுமி கண்கலங்கி கூறினார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் தந்தை உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர்.
சிறுமியை சனிக்கிழமை குழந்தைகள் நலக்குழு மலப்புரம் முன் ஆஜர்படுத்தப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…