டெல்லியில் கடும் பனி மூட்டம்…பொதுமக்கள் வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு…!!
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
தொடர்ந்து வடமாநிலங்களில் பனி பொலிவு ஏற்பட்டு வருகின்றது.குறிப்பாக தலைநகர் டெல்லி_யில் கடந்த சில நாட்களாவே பொலிந்து வரும் பனி பொலிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் பனி பொலிவின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எதிரே வரும் வாகனங்களை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவி வருகின்றது.
தொடர் பனி பொலிவால் டெல்லி_யில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் டெல்லியில் செல்லும் ரயில்கள் நேரம் மாற்றியமைக்கபட்டு காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.