சிபிஐ கைது என்பது ‘இன்சூரன்ஸ்’ கைது.! உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு பரபரப்பு வாதம்…

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார்.
இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, இதே மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு இருந்தார். அதானல் இடைக்கால ஜாமீனில் வெளியே வரமுடியாத நிலை உருவானது.
இதனால் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், கெஜிரிவால் தரப்பு வழக்கறிஞர் சிங்வி வாதிடுகையில், இந்த மதுபான வழக்கு பதியப்பட்டு 8 மாத விசாரணை வரையில் கெஜ்ரிவாலை கைது செய்யவோ, விசாரணை செய்யவோ சிபிஐ நினைக்கவில்லை.
இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு கைது செய்ய எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அமலாக்க வழக்கில் வெளியில் வரக்கூடாது என கூடுதல் இன்சூரன்ஸ் போல சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மூன்று விடுதலை (ஜாமீன்) உத்தரவுகள் உள்ளன.
கெஜிரிவால் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கிறார். வெளியில் அவரால் இந்த வழக்குக்கு இடையூறு நேராது. வழக்கில் கெஜ்ரிவால் தனது அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார் என்பதை உச்சநீதிமன்றம் இன்னும் கருதவில்லை. கெஜ்ரிவாலின் நேர்மையை உச்சநீதிமன்றம் சோதிக்கிறது. ஆனால் இடைக்கால ஜாமீன் முடிந்ததும் ஜுன் 2 நேர்மையாக கெஜிரிவால் சரணடைந்தார்.
சிபிஐ கைது தொடர்பான நீதித்துறை விளக்கம் எங்கே.? அந்த விளக்கம் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கப்படவில்லை. ஜாமீன் வழங்குவதற்கு முன்னாதாக் சிபிஐ கைது ஏன்? இது உண்மையில் தேவையா? என்ன நோக்கத்திற்காக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் .? என பல்வேறு கேள்விகளை கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025