புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை காணவில்லை! உறவினர்கள் போராட்டம்!

புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை காணவில்லை என உறவினர்கள் போராட்டம்.
பீகார் மாநிலம், பார்சோய் அடுத்த அபாத்பூர் பகுதியை சேர்ந்த மங்கலு(65) என்ற நபர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, கிராமத்திற்கு அருகிலுள்ள கல்லறையில், அவரது உடல் அவர்களது குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அடுத்த நாள், மங்கலுவின் மகன் முகமது பைக் அவரது தந்தையின் கல்லறைக்கு ஃபாத்திஹா துவாவை படிக்க சென்றுள்ளார். அப்போது அவரது தந்தையை புதைத்த இடத்தில் மண் சிதைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில், கல்லறை குழியை மீண்டும் தோண்டி பார்த்துள்ளனர்.
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, உடலில் இருந்து தலையை மட்டும் எடுத்து சென்றது யார்? என ஆவேசத்தில் பார்சோய் பிரதான சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரேம்நாத் ராம் கூறுகையில், ‘பஜித்பூரில் வசிக்கும் ஜஹாங்கிரின் தந்தை மஹ்புஸ் அலி என்பவர் சம்பத்தன்று தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து, கல்லறைக்கு அருகிலுள்ள மதுராபூர் பாலம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மங்கலுவின் குடும்பத்தினர் ஜஹாங்கீர் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேலும் சிலரிடம் விசாரித்து வருகிறோம்.’ என்று தெரிவித்துளளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025