ட்விட்டரில் ட்ரெண்டாகும் #HBD CMTejashwi ஹேஷ்டேக்..!

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைப்பெற்றது. நேற்று முன்தினம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும். யாருக்கு வெற்றி கிடைக்கும் என பல்வேறு ஊடகங்களின் கருத்து கணிப்பு வெளியாகியது.
பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகளில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாளை பீகார் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இன்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HBD CMTejashwi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.