மணிப்பூர் முதல்வர் திறந்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் தீ வைத்து எரிப்பு.! நகரில் 144 தடை உத்தரவு.!
மணிப்பூர் முதல்வரின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஒரு கும்பல் முதல்வர் என் பிரேன் சிங்கின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நாசப்படுத்தி தீ வைத்து எரித்ததாகக கூறப்படுகிறது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இன்று திறந்து வைக்கவிருந்த ஒரு திறந்த உடற்பயிற்சி கூடம் பகுதியளவு தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஒதுக்கப்பட்ட காடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக பழங்குடியின தலைவர்கள் மன்றம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணிப்பூர் முதல்வர் கலந்துக்கொள்ள இருந்த கூட்டத்தில் இருந்த 100 நாற்காலிகளை மர்ம கும்பல் எரித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, உள்ளூர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
அதன்படி, இந்த சம்பவம் நடந்த இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் மாதமும் மணிப்பூரில் உள்ள காங்போக்பியாட் காங்போக்பி நகரில் நடந்த அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையில் 5 பேர் பலியாகினர். மியான்மரை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பு போராட்டத்தைத் தூண்டியதாக பிரேன் சிங் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் மலை மாவட்டங்களில் உள்ள சில நிலங்களை ஒதுக்கப்பட்ட காடுகள் அல்லது ஈரநிலங்கள் என அரசு தவறாக அறிவித்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.