தனது நண்பனுக்காக ஆசிரியர் ஒருவர் டெல்லியிலிருந்து நொய்டா வரை 1,400 கிலோ மீட்டருக்கு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகோராவில் ஆசிரியராக பணியாற்றுபவர் தான் தேவேந்திரா. இவருக்கு 38 வயதுடைய ரஞ்ஜன் அகர்வால் எனும் நண்பர் டெல்லியில் இருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய ரஞ்சனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை மூலமாக அவருக்கு ஆக்சிஜன் மூலம் சுவாசம் கொடுக்கப்பட்டாலும், அதன் பின்பு மேற்கொண்டு ஆக்சிஜன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ரஞ்சன் அகர்வாலின் குடும்பத்தினர் ஆசிரியர் தேவேந்திராவுக்கு தகவல் அளித்தது உள்ளனர். உடனே தனது நண்பருக்காக பகோரா நகரில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு முயற்சித்துள்ளார் தேவேந்திரா. ஆனால், எவ்வளவு முயற்சித்தும் கிடைக்காத பட்சத்தில் 10 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு நிறுவனம் கடைசியாக கொடுக்க முன் வந்துள்ளது. இந்த சிலிண்டரை பெற்றுக்கொண்ட தேவேந்திரா தனது காரில் ஏற்றிக்கொண்டு டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார்.
ஜான்பூரிலிருந்து பீகார், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றை கடந்து நொய்டாவிற்கு தேவேந்திரா செல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மாலை நொய்டா வந்தடைந்துள்ளார் தேவேந்திரா. பல இடங்களில் போலீசாரால் வழி மறுக்கப்பட்டாலும் தனது நண்பனின் நிலையை எடுத்துக்கூறி ஆக்சிஜனை ஒருவழியாக ரஞ்சன் அகர்வால் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார். தற்பொழுது ரஞ்சன் அகர்வால் குணமடைந்து வருவதாகவும், அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பும் வரை தேவேந்திரா தனது நண்பருடன் கூடவே இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…