டெல்லி:ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்ற 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் வருகின்ற பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இது நான்காவது பட்ஜெட் கூட்டமாகும்.
இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.மேலும்,அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அந்த வகையில்,தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் வரிச் சீர்திருத்தம் தொடர்பான மாநில அமைச்சர்கள் குழுவின் அறிக்கை குறித்தும்,சில பொருள்கள் மீதான வரி விகிதம் குறைப்பு அல்லது மாற்றியமைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிபார்க்கப்பட்டது.
இதற்கிடையில்,செப்டம்பர் 17 அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மற்றும் காலணி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி,இந்த நடைமுறை நாளை அமலுக்கு வரவுள்ள நிலையில்,குஜராத், மேற்கு வங்கம்,டெல்லி, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் ஜவுளி பொருட்கள் மீதான அதிக வரி விகிதத்தை,கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மேலும்,ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமான உயர்வை திரும்ப பெறக் கோரி ஜவுளி உற்பத்தியாளர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
குறிப்பாக,இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் ஜவுளி துறையின் ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்,ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது.பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில்,ஜவுளிப் பொருட்களின் மீதான 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமான ஜிஎஸ்டி வரி உயர்வை தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளதாக இமாச்சலப் பிரதேச தொழில்துறை அமைச்சர் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.அதே சமயம்,இந்த விசயம் தொடர்பாக பிப்ரவரி 2022 இல் கவுன்சில் அதன் அடுத்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்,46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு செய்தியாளர் சந்திக்கவுள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…