திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!

Published by
Dinasuvadu desk

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை, மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான சதி திட்டங்களை செய்து வருவதாக ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Image result for Tirupatiமுதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அம்மாநிலத்தின் சித்தூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில், ”மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவின் மோடி அரசாங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாகத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியுள்ளது. இந்த சதி திட்டத்தை  நாங்கள் உடைத்து கோவிலை மாநில கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்போம்.

மத்திய அரசின் இந்த சதி திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. திருப்பதி ஏழுமலையான் அருளால், 2003-ம் ஆண்டு என் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதலில் உயிர் தப்பினேன். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை யாரும் சிதைக்க அனுமதிக்கமாட்டேன்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லிக்கு சென்று, நம் மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தருமாறும், மாநிலத்திற்கு  சிறப்பு அந்தஸ்து வழங்குமாறும் கேட்டேன். ஆனால் அவர்கள் எதையும் நமக்கு தராமல் துரோகம் செய்துவிட்டனர்”. என பேசினார்.

முன்னதாக, மத்திய அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோவில் உட்பட அனைத்து கோவில்களின் சொத்து விவரங்கள், அந்த கோவில்களின் வரலாறுகள் குறித்து தகவல்கள் அனுப்பும்படி, மத்திய தொல்லியல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி, பின் அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

13 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

14 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

14 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

15 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

16 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

17 hours ago