மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேரன் தடியால் அடித்து கொலை..!
உ.பி-யில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேரன் முன்பகை காரணமாக தடியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கேதார் சிங்கின் பேரன் ஹிமான்ஷு சிங். இவர் கடந்த சனிக்கிழமை லைரோ டோன்வார் கிராமத்தில் உள்ள ஒரு கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கூட்டத்தில் ஒரு குழுவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து திரும்பும் வழியில் மஹுவார் கிராமத்தில் முன்பகை காரணமாக அந்த கும்பலை சேர்ந்தவர்களில் 7 முதல் 8 பேர் சிங்கை தடியால் தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தாக்கப்பட்ட ஹிமான்ஷு சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பலியானவரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட ஏ.எஸ்.பி தெரிவித்தார்.