புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
அதேபோல் புதுச்சேரியில் அரசு சார்பில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விழா நடத்தப்பட்டது.அப்போது அந்த விழாவில் அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் ,புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்றார்.அப்போது விழா மேடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசியபோது இந்த அரசு குறித்து பல்வேறு குற்றசாட்டுக்களை முன் வைத்தார் பேசினார் அப்போது மைக்_கை அணைத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக MLA அன்பழகன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஒரு கட்டத்தில் ஆளுநரை ” யு கோ ” என்று சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கினார்.இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.அவர் கூறுகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது.அதேபோல் ஆளுநர் அலுவலகம் சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…