ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு விரைந்து உதவி கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் சௌந்தர்ராஜன் அவர்கள், சென்னை வந்தார்.
இதனையடுத்து, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தார் இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் ட்விட்டர் மூலம் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று சுகாதாரத்துறை செயலாளர் அருணை தொடர்பு கொண்ட, தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பெண்ணுக்கு உதவுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் அருண் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் இந்த உதவிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…