ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு விரைந்து உதவி கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை..! குவியும் பாராட்டு…!

ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு விரைந்து உதவி கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் சௌந்தர்ராஜன் அவர்கள், சென்னை வந்தார்.
இதனையடுத்து, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தார் இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் ட்விட்டர் மூலம் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று சுகாதாரத்துறை செயலாளர் அருணை தொடர்பு கொண்ட, தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பெண்ணுக்கு உதவுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் அருண் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் இந்த உதவிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025