சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.ஆனால் தேவேந்திர பத்னாவிசும் முதல்வர் நான்தான் என்று கூறிவந்தார்.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
ஆட்சியமைக்க பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் அவகாசம் தரவில்லை என சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ,56 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள 2வது மிகப்பெரிய கட்சியாக சிவசேனா உள்ளது, இருப்பினும் ஆட்சியமைக்க நாங்கள் முன்வைத்த காலக்கெடு கோரிக்கையை நிராகரித்தது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…