மணிப்பூர் சட்டப்பேரவை கூடும் நாள் வெளியானது.! பரபரான சூழலில் ஆளுநரிடம் மாநில அரசு பரிந்துரை.!
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் அங்கு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மொதலானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இதனால் மணிப்பூரில் சட்டசபை கூட்டம் விரைவில் துவங்கி, வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
12வது மணிப்பூர் சட்டமன்றத்தின் 4வது கூட்டத்தொடரை வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று கூட்டுமாறு மணிப்பூர் ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி மணிப்பூர் மாநில சட்டமன்றம் கூட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.