தேசியக் கல்விக் கொள்கையை முதலில் அமல்படுத்திய மாநிலம் கர்நாடகா – அமைச்சர்..!

Published by
Edison

தேசியக் கல்விக் கொள்கை நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வருவதாக  கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வியிலும்,உயர்கல்வியிலும் சீர்திருத்தங்களை கொண்ட தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து,அனைவருக்கும் சமமான,தரமான குறைந்த கட்டணத்தில் ஆன கல்வி கிடைப்பதை தேசிய கல்வி கொள்கை உறுதிப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக கூறியிருந்தார்.

ஆனால்,தேசிய கல்வி கொள்கையில் அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது.இதில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறி,அதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.

இந்நிலையில்,கர்நாடகாவில் தேசியக் கல்விக் கொள்கை(NEP) நடப்பு கல்வியாண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  அமல்படுத்துவது குறித்து மாநில அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதன் முதலில் அமல்படுத்திய மாநிலம் என்கிற பெயரை கர்நாடக அரசு பெற்றுள்ளது.

மேலும்,இது தொடர்பாக,மாநில உயர்கல்வி அமைச்சர் சிஎன் அஸ்வத் நாராயண் கூறுகையில்:”தேசிய கல்விக் கொள்கை -2020 அமல்படுத்த உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூலை 29 ஆம் தேதி, NEP இன் முதல் ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிமுகப்படுத்திய 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான திறன் அடிப்படையிலான மதிப்பீடான கற்றல் பகுப்பாய்வுக்கான கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு(SAFAL) தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்! 

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

30 minutes ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

1 hour ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

2 hours ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

2 hours ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

3 hours ago