மாணவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் எதிர்காலம் பற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது. பின்னர் முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே ஜே.இ.இ மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது வீடியோவில்,மாணவர்களாகிய நீங்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்கிறீர்கள்.நாட்டின் எதிர்காலம் நீங்கள் தான்.மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்றால் அவர்களின் ஒப்புதலுடன் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…