குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை கூட அரசால் வழங்க முடியவவில்லை..! கே.சி.ஆர் விமர்சனம்..

Default Image

மஹாராஷ்டிராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அம்மாநில அரசை விமர்சித்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கே சந்திரசேகர் ராவ், நாட்டின் தண்ணீர் பிரச்னை மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் மாநில அரசால் தண்ணீர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று கூறினார்.

அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் பல ஆறுகள் உள்ளன, ஆனால் இன்றும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது மிகவும் மோசமாக உள்ளது. மேலும், மக்கள் தங்கம், செங்கல் போன்றவற்றை கேட்கவில்லை, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்கிறார்கள், அதைக் கூட அரசால் வழங்க முடியாதா.? என்றும் எத்தனையோ அரசுகள் மாறிவிட்டன, ஆனால் அவர்களால் குடிநீர் வழங்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, எந்த நிறுவனத்திலும் தண்ணீர் தயாரிக்க முடியாது. தண்ணீர் என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம். அதை முறையாக பயன்படுத்த வேண்டும். இது பல நாடுகளில் முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டில் தான் தண்ணீர் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தண்ணீர் கொள்கையை மாற்ற வேண்டும். மகாராஷ்டிராவில் பி.ஆர்.எஸ் (பாரத் இராட்டிர சமிதி) அரசாங்கத்தை உருவாக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீரை வழங்குவோம் என்றார்.

மேலும், இன்று தெலுங்கானாவில் தினமும் தண்ணீர் வருகிறது. பணக்காரர்கள் குடிக்கும் தண்ணீரையே ஏழைகளுக்கும் கொடுக்கிறோம். எங்கள் ஆட்சி வந்ததும், ஒவ்வொரு விவசாயிக்கும் தண்ணீர் கொடுப்போம், இது எனது வாக்குறுதி. தண்ணீருக்காக அழாதீர்கள், அதற்காக போராடுங்கள். விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து நிலைமையை மாற்றுவோம் என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்