இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேசன்களுக்கு தடை – மத்திய அரசு தகவல்!

Default Image

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

எதற்காக முடக்கம்?:

மேலும்,மாநிலத்தின் இறையாண்மை,ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி இந்த மொபைல் அப்ளிகேஷன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அவர் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் :

“அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன்,2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்ட பிரிவு 69A இன் கீழ், மத்திய இதுவரை 320 மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள்ளது” என்று மத்திய கூறினார்.மேலும்,கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 மொபைல் அப்ளிகேசன்கள் மீண்டும் தடை செய்யப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து,மற்றொரு எழுத்துப்பூர்வ பதிலில்,ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2021 வரை சீனாவிடமிருந்து 2.45 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) இந்தியா பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்