தன்பால் ஈர்ப்பு திருமண எதிர்ப்பு.! மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்.!
அரசு யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட விரும்பாது. ஆனால், நமது நாட்டில் திருமணம் என்பது கொள்கை சார்ந்த விஷயம் என தன்பாலின ஈர்ப்பாளர் திருமணம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், ஓரின சேர்க்கை திருமண அங்கீகாரத்திற்கு மத்திய அரசு எதிர்ப்புகளை தெரிவித்து இருந்த்து.
தனிப்பட்ட வாழ்க்கை :
இது குறித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், மத்திய அரசு யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனிப்பட்ட நடவடிக்கைகளிலும் தலையிட விரும்பாது. யாரையும் கட்டுப்படுத்த நினைப்பதில்லை.
திருமண கொள்கை :
ஆனால், நமது நாட்டில் திருமணம் என்பது கொள்கை சார்ந்த விஷயம். என்பதால் அதில் பிரச்சனை உண்டாகிறது. குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரம் அல்லது தனிப்பட்ட செயல்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடுவதில்லை. இரண்டு விஷயங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்தார்.