இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,364 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,660 ஆகவும் பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,75,55,457 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 தேதி முதல் 3 லட்சத்தை கடந்து வந்த தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
- கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,75,55,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் இறப்பு எண்ணிக்கை 3,660 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,18,895 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,59,459 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,93,410 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23,43,152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை நாட்டின் இதுவரை 20,57,20,660 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.