டெல்லி விபத்தில் உயிரிழந்த இளம்பெண் குடிபோதையில் இருந்தாரா.? தோழி கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

Default Image

டெல்லி விபத்து சம்பவம் நடந்த அன்று அந்த இளம்பெண் மது குடித்து இருந்ததாக குறிப்பிட்டார். கார் வந்து மோதுகையில் தான் வேறு பக்கம் விழுந்ததாகவும், அந்த இளம் பெண் காரின் சக்கரத்தில் மாட்டி இழுத்து செல்லப்பட்டதாகவும் தோழி நிதி குறிப்பிட்டுள்ளார்.  

புத்தாண்டு அன்று நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது டெல்லியில் இளம்பெண் கார் மோதி சில கிமீ தூரம் சாலையோரம் இழுத்து செல்லப்பட்ட உயிரிழந்த சம்பவம் தான்.

இந்த சம்பவத்தில்  தொடர்புடைய 5 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், அந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் பயணித்த அவரது தோழி நிதி கூறுகையில், சம்பவம் நடந்த அன்று அந்த இளம்பெண் மது குடித்து இருந்ததாக குறிப்பிட்டார்.  வலுக்கட்டாயமாக அந்த வாகனத்தை இயக்கியதாகவும் குறிப்பிட்டார்.

அந்த கார் வந்து மோதுகையில் தான் வேறு பக்கம் விழுந்ததாகவும், அந்த இளம் பெண் காரின் சக்கரத்தில் மாட்டி இழுத்து செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். காருக்கு அடியில் அந்த பெண் மாட்டிக்கொண்டது காரின் உள்ளே இருந்தவர்களுக்கு தெரியும் எனவும் இறந்து போன பெண்ணின் தோழி நிதி தகவல் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்